Saturday, March 1, 2008

தமிழ் prakasam

வேலைக்காரர்கள் கூட மதிக்காத ஹிட்லர்
இரண்டாம் உலகப் போரின்போது உலகமே பார்த்து நடுங்கிய ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரைப் பணியாட்கள்கூட மதிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு அவரைச் சந்தித்த தேபராமிட்ஃபோர்டு என்ற பெண் இத்தகவலைத் தெரிவித்தார்.1920-களில் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பேர்போன மிட்போர்டு சகோதரிகளால் கடைக்குட்டிதான் தேபரா.இவரது சகோதரியான யுனிட்டி ஹிட்லர் மீது காதல் கொண்டார். யுனிட்டி, தேபரா மற்றும் இவர்களது தாயார் ஆகிய மூவரும் ஹிட்லரைப் பார்ப்பதற்காக மூனிச் நகருக்குச் சென்றபோது அங்கு நடந்த சம்பவங்களை சன்டே டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தேபரா விவரித்தார்.1937-ம் ஆண்டு ஹிட்லரைப் பார்ப்பதற்கு நாங்கள் மூவரும் மூனிச் நகருக்குச் சென்றோம். அப்போது டீ கொண்டு வருவதற்கு பணியாளை அழைப்பதற்காக தனது மேஜையில் இருந்த அழைப்பு மணியை ஹிட்லர் தொடர்ந்து அழுத்தினார். எனினும் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை.இது எங்களுக்கு மிகவும் வித்தியாசமாகப்பட்டது என்று தேபரா கூறியுள்ளார். யுனிட்டியைப் போல் நீங்களும் ஹிட்லரைக் காதலித்தீர்களா என்று கேட்டற்கு, மறுப்பு தெரிவித்தார் தேபரா.`சர்ச்சில் அறையிலோ, கென்னடி அறையிலோ உட்கார்ந்திருந்தால், அவர்களின் ஆளுமைத் திறனை நாம் காணமுடியும். ஆனால் ஹிட்லரிடம் அது இல்லை’ என்கிறார் தேபரா.ஹிட்லரைக் காதலித்த யுனிட்டி இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது தலையில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வயலின் கலைஞர் ஒருவரை தேபரா மணந்தார்.

Thursday, February 28, 2008

TWINGLE TWINGLE

TWINGLE TWINGLE LITTLE STAR
HOW A WONDER WHAT A WOW
Upow by the birds of sky
like a diamond in the sky .